search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
    X
    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    பள்ளிகளுக்கு வரும் 25-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை -அமைச்சர் அறிவிப்பு

    பள்ளிகளில் நடக்கும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக தீவிரமாக ஆலோசனை நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
    நெல்லை:

    நெல்லை சாப்டர் பள்ளியில் கடந்த 17-ந்தேதி கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியானார்கள். 6 மாணவர்கள் காயம் அடைந்தனர். விபத்து நடந்த பகுதியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.  பள்ளி வளாகத்தையும் சுற்றி பார்வையிட்டார். மேலும், கட்டிட விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். 

    இதைத்தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நெல்லை மாவட்ட மைய நூலகமான பாளை தலைமை நூலகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் நடந்த மண்டல அளவிலான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டியின்போது, நடப்பாண்டில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என்றார். வரும் 25-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை  என்றும் அறிவித்தார். 

    பள்ளிகளில் நடக்கும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக தீவிரமாக ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
    Next Story
    ×