என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  பள்ளி மாணவர்களுக்கு கையேடு - பெற்றோர் கோரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாணவர் கையேடு வாயிலாக தங்கள் குழந்தைகளின் படிப்பு பற்றிய விபரங்களை பெற்றோர் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது.
  உடுமலை:

  அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகம், சீருடை, சைக்கிள் உள்ளிட்ட பல இலவச திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில், மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கச்செய்யும் வகையில் ஒவ்வொரு மாணவருக்கும் மாணவர் கையேடு வழங்கப்படுகிறது.

  அதில் மாணவர்களின் படிப்பு பற்றிய விபரங்கள் பெற்றோர் பார்வைக்கு அனுப்பப்படுகிறது. குறிப்பாக ஹோம் ஒர்க், தேர்வு, மதிப்பெண் என பல்வேறு விபரங்களை கையேட்டில் எழுதி பெற்றோருக்கு தினந்தோறும் தெரியப்படுத்தப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர் கையேடு வழங்கவில்லை. 

  தற்போது பள்ளிகள் செயல்படுவதால் 2022ம் ஆண்டுக்கான மாணவர் கையேடு வழங்க  உடுமலை கல்வி மாவட்ட மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

  மாணவர் கையேடு வாயிலாக தங்கள் குழந்தைகளின் படிப்பு பற்றிய விபரங்களை பெற்றோர் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது. அதில் மாணவர்களின் செயல்பாடுகள், பள்ளிகளின் விதிமுறைகள், அரசின் நலத்திட்ட உதவிகள், ஆசிரியர்களின் செல்போன் எண்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இடம்பெறும். 

  அவ்வகையில் உடுமலை கல்வி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 2022ம் ஆண்டுக்கான மாணவர் கையேடு தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கையேடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
  Next Story
  ×