search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பொங்கலுக்கு ரொக்க தொகை இல்லை- புதிய சுற்றறிக்கை வெளியீடு

    பொங்கல் பரிசுத் தொகுப்பினை நியாய விலைக்கடைகள் மூலமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுவதை கட்டுப்பாட்டு அறை அமைத்து தொடர்பு அலுவலரை நியமித்து கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்குகிறது. இதனை ஒரு பையில் போட்டு கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அனைத்து கூட்டுறவு சங்க பதிவாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

    அதில் மண்டல இணை அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை அமைத்து தொடர் அலுவலர் ஒருவரை நியமித்து பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ஆகியவை நியாய விலைக்கடைகள் மூலமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதை தினந்தோறும் கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதன் மூலம் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க பணத்தையும் வழங்க இருப்பதாக தகவல் வெளியானது. அது எவ்வளவு ரூபாய் என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் இது தொடர்பாக புதிய சுற்றறிக்கை ஒன்று கூட்டுறவு சங்க பதிவாளர் மற்றும் மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் ரொக்கத் தொகை என்கிற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொங்கலுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

    புதிய சுற்றறிக்கையில், “கட்டுப்பாட்டு அறை அமைத்து தொடர்பு அலுவலரை நியமித்து பொங்கல் பரிசுத் தொகுப்பினை நியாய விலைக்கடைகள் மூலமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுவதை கண்காணிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    ரொக்கத்தொகை என்கிற வார்த்தை நீக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×