என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சின்ன வெங்காயம்
  X
  சின்ன வெங்காயம்

  சின்ன வெங்காயம் கிலோ ரூ.80-க்கு விற்பனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வரத்து குறைவால் வெண்டைக்காய், ஊட்டி கேரட், முருங்கைக்காய் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
  போரூர்:

  கோயம்பேடு மார்கெட்டுக்கு இன்று 290 லாரிகளில் காய்கறி விற்பனைக்கு வந்துள்ளது. வழக்கம் போல நள்ளிரவில் விறுவிறுப்பாக தொடங்கிய காய்கறி விற்பனை பின்னர் அதிகாலையில் மார்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து குறைந்ததால் மந்தமானது.

  வரத்து குறைவால் வெண்டைக்காய், ஊட்டி கேரட், முருங்கைக்காய் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. பீன்ஸ், அவரைக்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் விலை கடந்த சில நாட்களாக வரத்து அதிகரித்து விலை குறைந்து வருகிறது. கடந்த வாரம் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.100 வரை விற்ற உஜாலா கத்தரிக்காய் இன்று விலை குறைந்து கிலோ ரூ.50-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் ஒரு கிலோ ரூ.60க்கு விற்ற சின்ன வெங்காயம் விலை அதிகரித்து ரூ.80-க்கு விற்கப்படுகிறது.

  இன்றைய காய்கறி மொத்த விற்பனை விலை விபரம் வருமாறு (கிலோவில்) தக்காளி-ரூ.35, நாசிக் வெங்காயம்-ரூ.38, சின்ன வெங்காயம்-ரூ.80, ஆக்ரா உருளைக்கிழங்கு-ரூ.15, கோலார் உருளைக்கிழங்கு-ரூ.23, உஜாலா கத்தரிக்காய்-ரூ.50, அவரைக்காய்-ரூ.50, பீன்ஸ்-ரூ.50, வெண்டைக்காய்-ரூ.80, முருங்கைக்காய்-ரூ.180, ஊட்டி கேரட்-ரூ.75, ஊட்டி பீட்ரூட்-ரூ.60, முட்டைகோஸ்-ரூ.32, புடலங்காய்-ரூ.30, கோவக்காய்-ரூ.40, பீர்க்கங்காய்-ரூ.40, குடை மிளகாய்-ரூ.60, பஜ்ஜி மிளகாய்-ரூ.50, காலி பிளவர் (ஒன்று) -ரூ.30, வெள்ளரிக்காய்-ரூ.12, சோளம்-ரூ.15, சேனைக்கிழங்கு-ரூ.15, சேப்பங்கிழங்கு-ரூ.20, சக்கரவள்ளி கிழங்கு-ரூ.20, கொத்தவரங்காய்-ரூ.60, சுரக்காய்-ரூ.30, பன்னீர் பாகற்காய்-ரூ.70, பாகற்காய்-ரூ.50, இஞ்சி-ரூ.18, பச்சை மிளகாய்-ரூ3.5 எலுமிச்சை பழம்-ரூ.30, தேங்காய்-ரூ.32.

  Next Story
  ×