என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மாயமான கிளியை கண்டுபிடித்து தருமாறு பொள்ளாச்சி பகுதியில் வினியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரம்.
  X
  மாயமான கிளியை கண்டுபிடித்து தருமாறு பொள்ளாச்சி பகுதியில் வினியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரம்.

  மாயமான கிளியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாயமான கிளியை கண்டுபிடிக்கும் நோக்கில் நோட்டீஸ் அடித்து பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உரிமையாளர் வினியோகித்து வருகிறார்.
  பொள்ளாச்சி:

  கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை ஒரு வித்தியாசமான துண்டு பிரசுரம் மக்களை அதிகளவில் வியப்பில் ஆழ்த்தியது. வீட்டில் செல்லமாக வளர்த்த கிளியை கடந்த 10 நாட்களாக காணவில்லை என்றும் அதனை கண்டுபிடித்து தருபவர்களுக்கு வெகுமதி வழங்குவதாகவும் கூறப்பட்டிருந்தது.

  வீடுகளில், நாய், பூனை, புறா, கிளி போன்ற செல்லப்பிராணிகளை மக்கள் அதிகளவில் வளர்த்து வருகிறார்கள். அதனை வளர்ப்பதின் மூலம் தங்களுக்கு மன அமைதி கிடைப்பதாக கூறுகின்றனர்.

  பொள்ளாச்சி ஜீவா நகரை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தனது வீட்டில் கிளி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். தான் வளர்க்க கூடிய கிளியை மிகவும் செல்லத்துடன் வளர்த்துள்ளார்.

  இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த கிளி திடீரென மாயமாகி விட்டது. வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த கிளியின் உரிமையாளர் தனது வீட்டில் செல்லமாக வளர்த்த கிளியை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்திலும் தேடி பார்த்தார். செல்லமாக வளர்த்த கிளி திடீரென மாயமானதால் மிகவும் மனவருத்தத்துடன் இருந்தார்.

  இந்த நிலையில் மாயமான தனது கிளியை கண்டுபிடிக்கும் நோக்கில் நோட்டீஸ் அடித்து பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதனை வினியோகித்து வருகின்றனர்.

  அந்த நோட்டீசில், எங்கள் வீட்டில் வளர்த்த கிளி திடீரென மாயமாகி விட்டது. அந்த கிளியை நாங்கள் ஒரு குழந்தை போல வளர்த்து வந்தோம். கிளியை பிரிந்து நாங்களும், எங்களை பிரிந்து கிளியும் மீளா துயரத்தில் இருக்கிறோம். இந்த கிளியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு வெகுமதியான அன்பளிப்பு வழங்கப்படும் என எழுதப்பட்டிருந்தது.

  Next Story
  ×