என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தீயில் கருகிப்போன தங்க நகைகள் மற்றும் ரூபாய் நோட்டுகள்
  X
  தீயில் கருகிப்போன தங்க நகைகள் மற்றும் ரூபாய் நோட்டுகள்

  பால் பண்ணை ஊழியர் வீட்டில் பயங்கர தீ விபத்து: நகை-பணம் எரிந்து நாசம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாழப்பாடி அருகே பால் பண்ணை ஊழியர் வீட்டில் சோலார் பேட்டரி வாயிலாக ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
  வாழப்பாடி:

  சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி ஆதிதிராவிடர் தெரு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). இவர் கருமாபுரம் பகுதியில் இயங்கும் தனியார் பால் பண்ணையில் தரக்கட்டுப்பாட்டு பணியாளராக உள்ளார். இவரது மனைவி வாணி. இவர் அரசு மருத்துவமனையில், ஊழியராக பணிபுரிகிறார். இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

  நேற்று வீட்டை பூட்டி விட்டு, களரம்பட்டியிலுள்ள மாமனார் வீட்டிற்கு ரமேஷ் குடும்பத்துடன் சென்றுவிட்டார். இன்று அதிகாலை இவரது வீட்டில் இருந்து புகை வருவதை கண்ட அப்பகுதி மக்கள் வீட்டை திறந்து பார்த்தபோது, வீட்டிற்குள் இருந்த கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. பீரோ, துணிகள் வீட்டு உபயோக பொருட்கள் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

  இதுகுறித்து வாழப்பாடி தீயணைப்பு படையினருக்கும், வீட்டு உரிமையாளர் ரமேஷுக்கும் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வீட்டிற்குள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அனைத்தனர். இருப்பினும் வீடு கட்டுவதற்காக பல ஆண்டாக சேமித்து வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் கட்டில், பீரோ உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் உள்பட ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது. இதனை பார்த்து ரமேஷ் குடும்பத்தினர் கண் கலங்கினர்.

  சோலார் பேட்டரி வாயிலாக ஏற்பட்ட மின் கசிவால், வீட்டிற்குள் தீ விபத்து ஏற்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
  Next Story
  ×