என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைது
  X
  கைது

  9-ம் வகுப்பு மாணவி மிரட்டி கற்பழிப்பு: இறைச்சி கடை உரிமையாளர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவள்ளூர் அருகே 9-ம் வகுப்பு மாணவியை மிரட்டி கற்பழித்தது தொடர்பாக இறைச்சி கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
  திருவள்ளூர்:

  திருவள்ளூரை அடுத்த நயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

  கடந்த சில நாட்களாக சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து பெற்றோர் விசாரித்தபோது மாணவி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

  இதுபற்றி மாணவியிடம் விசாரித்தபோது அதே பகுதியைச் சேர்ந்த இறைச்சி கடை உரிமையாளர் முனுசாமி, மாணவியை மிரட்டி பலமுறை கற்பழித்து இருப்பது தெரிந்தது.

  இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி வழக்கு பதிவு செய்து முனுசாமியை கைது செய்தார்.

  கைதான முனுசாமியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.
  Next Story
  ×