என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைது
  X
  கைது

  கடம்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடம்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  திருவள்ளூர்:

  திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 22). இவர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் வார்டு பாயாக வேலை செய்து வருகிறார். இவர் தினமும் ரெயில் மூலம் சென்னைக்கு வேலைக்கு சென்று வருகிறார். நேற்று முன்தினம் பார்த்திபன் வழக்கம் போல கடம்பத்தூர் மோட்டார் சைக்கிள் நிறுத்தத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார். இரவு வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவர் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த மோட்டார் சைக்கிளை திருடியது அரக்கோணம் ஜோதிநகர் சாஸ்திரி தெருவை சேர்ந்த மணிகண்டன் (19), அவரது நண்பர் கும்மினிப்பேட்டை, பாலகிருஷ்ணாபுரம், அம்மன் கோவில் தெருவை சேர்ந்த தென்னரசு (19) என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் மேற்கண்ட 2 பேரையும் கைது செய்து அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளை கைப்பற்றி பார்த்திபனிடம் ஒப்படைத்தனர்.
  Next Story
  ×