என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
அக்டோபர் மாத மின்கட்டணத்தை செலுத்த வேண்டுகோள்
நிர்வாக காரணங்களினால் டிசம்பர் 2021 மாத கணக்கீடு செய்ய இயலவில்லை.
உடுமலை:
உடுமலை கோட்ட மின் வாரியம் உதவி மின் பொறியாளர் கிழக்கு பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட கண்ணமநாயக்கனூர், தொட்டியனூர் மற்றும் 230 கே.வி.எஸ்.எஸ்., பகிர்மான மின் இணைப்புகளுக்கு நிர்வாக காரணங்களினால் டிசம்பர் 2021 மாத கணக்கீடு செய்ய இயலவில்லை.
மேற்படி பகிர்மான மின் நுகர்வோர்கள் அக்டோபர் 2021 மாதத்தில் செலுத்திய மின் கட்டணத்தொகையையே டிசம்பர் மாதத்திற்கும் செலுத்தலாம்.
இத்தகவலை உடுமலை செயற்பொறியாளர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Next Story