என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  லாரியில் இருந்து கீழே விழுந்த டிரைவர் உயிரிழப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் வீரமணி உயிரிழந்தார்.
  திருப்பூர்:

  திண்டுக்கல் மாவட்டம் பெரியகுளம், கல்லுப்பட்டி, பேட்டை தெருவைச் சேர்ந்தவர் வீரமணி ( வயது 52). லாரிடிரைவர். திருமுருகன்பூண்டி ராக்கியாபாளையத்தில் உள்ள பனியன் கம்பெனிக்கு லோடு ஏற்ற சென்றார். 

  பின் லாரியின் கேபினில் தூங்கிக் கொண்டிருந்தார். சரக்குகள் ஏற்றி முடிந்த பிறகு லோடுமேன்கள் லாரியை எடுக்கச் சொல்ல தூங்கிக் கொண்டிருந்த வீரமணியை எழுப்பினர். தூக்க கலக்கத்தில் எழுந்தவர் லாரியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். 

  உடனே அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் வீரமணி உயிரிழந்தார். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
  Next Story
  ×