என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  செல்போன் கடைக்காரரிடம் தகராறு - போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு மாற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
  திருப்பூர்:

  திருப்பூர் வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் அலெக்சாண்டர். இவர் சம்பவத்தன்று இரவு திருப்பூர் அவிநாசி ரோடு, புஷ்பா பஸ் நிறுத்தத்தில் உள்ள ஒரு செல்போன் கடைக்கு சென்றார். அங்கிருந்த கடைக்காரரிடம் வாக்குவாதம் செய்து மிரட்டும் வகையில் பேசியதாக தெரிகிறது. 

  இது கடையில் இருந்த சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதில், போலீஸ்காரர் கடைக்குள் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டல் விடுத்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

  இதையறிந்த திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா, போலீஸ்காரர் அலெக்சாண்டரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
  Next Story
  ×