என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  உடைக்கப்பட்ட ஆம்புலன்ஸ்.
  X
  உடைக்கப்பட்ட ஆம்புலன்ஸ்.

  திருப்பூர் மறியல் போராட்டத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தை சேதப்படுத்திய 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆம்புலன்ஸ் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை சிலர் உடைத்தனர்.
  திருப்பூர்:

  திருப்பூர் பூலுவப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படிக்கும் 5 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

  இந்த விவகாரத்தில் நேர்மையாக விசாரணை நடத்தக்கோரி மாதர் சங்கத்தினர் பள்ளி முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவர்களின் பெற்றோர், பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். 

  அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை சிலர் உடைத்தனர். இது தொடர்பாக திருப்பூர் தோட்டத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது20), ஆனந்தகுமார் (25) ஆகிய 2பேரையும் போலீசார் கைது செய்தனர்.
  Next Story
  ×