என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கொலை செய்யப்பட்ட சுதா.
  X
  கொலை செய்யப்பட்ட சுதா.

  தாராபுரத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரிந்தது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இன்ஸ்பெக்டர்கள் தாராபுரம் மணிகண்டன், மூலனூர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
  தாராபுரம்:

  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தச்சன்புதூர் ரோடு பாலசுப்பிரமணியம் நகர் பகுதியில் காலி வீட்டுமனைகள் உள்ளது. அங்கு 40 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
   
  இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் தாராபுரம் மணிகண்டன், மூலனூர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு இறந்துகிடந்த பெண் நிர்வாண நிலையில் கிடந்தார். அவரது கழுத்து நெரிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவரை மர்மநபர்கள் கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.  

  மேலும் அந்த பெண்ணை அங்கு தரதரவென்று இழுத்து வந்துள்ள தடயங்கள் இருந்தது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் ஊர், பெயர் விவரம் மற்றும் அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யாரென்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

  விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் திருப்பூர் திருமுருகன்பூண்டியை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மனைவி சுதா (வயது 45) என்பது தெரியவந்தது. பிரகாஷ் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். 

  சுதா தினமும் தாராபுரத்திற்கு சென்று வருவது வழக்கம். அதுபோல் சம்பவத்தன்று நண்பர்கள் சிலருடன் தாராபுரத்திற்கு வந்துள்ளார். அதன்பிறகு அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் சுதாவுடன் சென்றவர்கள் கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அவர்கள் யாரென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
  Next Story
  ×