search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேதமடைந்த மெய்யூர் தரைப்பாலம்
    X
    சேதமடைந்த மெய்யூர் தரைப்பாலம்

    கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தில் தரைப்பாலம் சேதம்: 20 கிராமங்களில் ஒரு மாதமாக போக்குவரத்து துண்டிப்பு

    அத்தியாவசியத் தேவைக்கு, மெய்யூர், ராஜபாளையம், வேம்பேடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமார் 25 கி.மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுஉள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கன மழையால் கொசஸ்தலை ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தில் பல இடங்களில் தரைப்பாலங்கள் சேதம் அடைந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

    மெய்யூர் ராஜபாளையம் அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் உடைந்து கடும் சேதமடைந்தது. இதன் காரணமாக மெய்யூர், ராஜபாளையம், வேம்பேடு, சோமதேவன் பட்டு, தேவந்தவாக்கம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு இன்று வரை போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமலும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    அத்தியாவசியத் தேவைக்கு, மெய்யூர், ராஜபாளையம், வேம்பேடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமார் 25 கி.மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுஉள்ளது.

    தற்போது கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் வடிந்துள்ளது. எனவே சேதமடைந்த தரை பாலத்தை தற்காலிகமாக சீர் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×