என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்.
  X
  கோப்புபடம்.

  தவணை தவறிய பண்ணை சாரா கடன் செலுத்த 31-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த திட்டத்தில் சேர்ந்து ஒரே தவணையில் முழுமையாக கடன் செலுத்தி பயனடையலாம்.
  திருப்பூர்:

  திருப்பூர் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

  திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 9 தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் கடந்த 2014 மார்ச் 31-ந்தேதியன்று தவணை தவறிய பண்ணை சாரா கடனுக்கான ஒருமுறை கடன் தீர்வு திட்டத்தின்கீழ் செயலாக்க காலம் வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

  இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 51 பேர் செலுத்த வேண்டிய தொகை அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ.3 கோடியே 11 லட்சத்து 99 ஆயிரம். அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு ஏற்கனவே 25 சதவீதம் செலுத்தி யுள்ள கடன்தாரர்கள் மீதமுள்ள 75 சதவீத தொகையை செலுத்துவதற்கு ஏதுவாகவும் மற்றும் இதுவரை இந்த திட்டத்தில் சேராதவர்கள் உடனடியாக இந்த திட்டத்தில் சேர்ந்து ஒரே தவணையில் முழுமையாக கடன் செலுத்தி பயனடையலாம். 

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×