என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தமிழக மீனவர்கள் 55 பேர் கைது - பாராளுமன்றத்தில் விவாதிக்க தி.மு.க. நோட்டீஸ்
Byமாலை மலர்20 Dec 2021 8:00 AM GMT (Updated: 20 Dec 2021 8:00 AM GMT)
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 55 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி:
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த 55 மீனவர்களையும், 8 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் நேற்று சிறை பிடித்தனர்.
இலங்கை கடற்படையினரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 55 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இந்த நிலையில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது பற்றி பாராளுமன்ற மக்களவையில் விவாதிக்கக் கோரி தி.மு.க. எம்.பி.க்கள் குழுத்தலைவர் டி.ஆர்.பாலு இன்று நோட்டீஸ் அளித்தார்.
Next Story
×