search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    இலவச தொழில் பயிற்சி

    8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் படித்தோர் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
    திருப்பூர்:

    திருப்பூர் அவிநாசி கைகாட்டிபுதூரில் ஏ.இ.பி.சி.,யின் ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையம் (ஏ.டி.டி.சி.,) இயங்குகிறது. இம்மையத்தில் மெர்ச்சன்டைசர், தொழிற்சாலை பொறியியல் (இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங்), தையல் எந்திரம் மெக்கானிக் போன்ற ஆயத்த ஆடை உற்பத்தி துறை சார்ந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

    ஏ.டி.டி.சி., மற்றும் க்ராஸ் பெக்கர்ட் ஆசியா நிறுவனம் இணைந்து இலவச தையல் எந்திரம் பழுது பார்க்கும் பயிற்சி விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடந்துவருகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் படித்தோர் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். 

    18 முதல் 30 வயதுக்கு உட்பட்டோராக இருக்க வேண்டும். மொத்தம் 6 மாதம் பயிற்சி அளிக்கப்படும். தினமும் மதியம் 1:30 முதல் மாலை 5 மணி வரை வகுப்பு நடத்தப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 88700 08553 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஏ.டி.டி.சி., மைய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர் - அவிநாசி ரோடு அனுப்பர்பாளையம்புதூரில் கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் செயல்படுகிறது. இந்த மையம் சார்பில் கிராமப்புற மக்களுக்கு இலவச தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. 

    தற்போது அப்பளம், ஊறுகாய் மற்றும் மசால் பொடி தயாரிப்பு பயிற்சியில் இணைவதற்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. பயிற்சியில் 30 வகை மசாலா பொடிகள், அப்பளம், ஊறுகாய் மற்றும் ஜாம் தயாரிப்பு குறித்து 10 நாட்கள் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

    கிராமப்புற வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர் மட்டும் பயிற்சியில் சேரலாம். எவ்வித கட்டணமும் கிடையாது.பயிற்சி நாட்களில் காலை, மாலை தேநீர், மதிய உணவு, பயிற்சி உபகரணங்கள், சீருடை இலவசமாக வழங்கப்படும். 

    பயிற்சி முடிப்போருக்கு தொழில் தொடங்க  கடன் ஆலோசனை, தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோர் 77082 74497 என்கிற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×