என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  இணைநோய் பாதிப்பால் திருப்பூரில் 2 வாரங்களில் கொரோனாவால் 16 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நவம்பர் கடைசி வாரம் 600 க்கும் குறைவானவர்கள் சிகிச்சையில் இருந்தனர்.
  திருப்பூர்:

  திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தாலும்  இணைநோய் உள்ளவர்களை குணப்படுத்தி ‘டிஸ்சார்ஜ்’ செய்ய இயலாததால் நடப்பு மாதம் இதுவரை 16 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் 60 வயதை கடந்தவர்கள். ஏதேனும் ஒரு இணை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தவர்கள்.

  இம்மாத தொடக்கத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 600ஐ கடந்திருந்தது. குறிப்பாக 4-ந் தேதி 50ஆக இருந்த ஒரு நாள் பாதிப்பு 5-ந்தேதி  65 ஆக உயர்ந்ததால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை  645 வரை சென்றது. இருப்பினும்  ஒருபுறம் குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து 50ஐ தாண்டி பதிவானதால் 10  நாட்களுக்கு முன்பிருந்த நிலைமை தற்போது திரும்பியுள்ளது.

  நவம்பர் கடைசி வாரம்  600 க்கும் குறைவானவர்கள் சிகிச்சையில் இருந்தனர். தற்போதும் 552 பேர் சிகிச்சையில் உள்ளனர். சுகாதார துறையினர் கூறுகையில், ‘இரண்டு தடுப்பூசி செலுத்தியவருக்கு உடல் எதிர்ப்பு சக்தி ஒத்துழைப்பதால் விரைந்து உடல் நலம் தேறி விடுகின்றனர்.

  இணை நோய் உள்ளவருக்கு ஒருபுறம் அதற்கு சிகிச்சையளித்து, மறுபுறம் கொரோனாவுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும். சிலருக்கு தொடர் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் போய் விடுகிறது  என்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் மொத்தம் 1016 பேர் பலியாகி உள்ளனர்.
  Next Story
  ×