என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  போராட்டம்
  X
  போராட்டம்

  ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

  ராமேசுவரம்:

  ராமேசுவரம் மீனவர்கள் 43 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்த சம்பவத்தை தொடர்ந்து அனைத்து மீனவர்கள் சங்க அவசர ஆலோசனை கூட்டம் துறைமுக பகுதி மீனவர் சங்க தலைவர் சேசுராஜ் தலைமையில் ராமேசுவரத்தில் இன்று நடந்தது.

  அந்த கூட்டத்தில் 11 மீனவர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அதில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

  அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது, ராமேசுவரம் பஸ் நிலையத்தில் நாளை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

  இதைத்தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்கள் கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை இன்று தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. 

  Next Story
  ×