என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பெண் தீக்குளித்ததால் பரபரப்பு
  X
  பெண் தீக்குளித்ததால் பரபரப்பு

  கல்லிடைக்குறிச்சியில் வீட்டை காலி செய்ய மறுத்து பெண் தீக்குளித்ததால் பரபரப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கல்லிடைக்குறிச்சியில் வீட்டை காலி செய்ய மறுத்து பெண் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  அம்பை:

  நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோட்டைவிளை தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மனைவி சரசுவதி (வயது 60). அதே பகுதியில் வசிப்பவர் சின்னத்தாய்.

  இவரும், பாலகிருஷ்ணனும் அண்ணன்-தங்கை ஆவர். பாலகிருஷ்ணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். பின்னர் சரசுவதிக்கும், சின்னத்தாய்க்கும் இடையே பூர்வீக வீடு தொடர்பாக சொத்து பிரச்சினை ஏற்பட்டு, அம்பை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

  இதில் சின்னத்தாய்க்கு சாதகமாக கோர்ட்டில் தீர்ப்பு வந்தது. இதையடுத்து சரசுவதியின் வீட்டுக்கு சென்ற கோர்ட்டு அமீனா காளிராஜ் மற்றும் ஊழியர்கள், வீட்டை காலி செய்யுமாறு அவரிடம் அறிவுறுத்தினர்.

  ஆனால் அதற்கு மறுத்தசரசுவதி திடீரென்று தனது உடலில் டீசல் ஊற்றி தீக்குளித்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
  Next Story
  ×