என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கொள்ளை
  X
  கொள்ளை

  ஜோலார்பேட்டை அருகே பெண் இன்ஸ்பெக்டரிடம் நகை பறித்த திருடன் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜோலார்பேட்டை அருகே பெண் இன்ஸ்பெக்டரிடம் நகை பறித்த திருடனை 5 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.
  ஜோலார்பேட்டை:

  ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் நேற்றிரவு ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

  அப்போது சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதனால் அந்த வாலிபரை ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

  விசாரணையில் ஆம்பூர் அருகே நியூ பெத்தலகேம் பகுதியை சேர்ந்த அசார் என்கின்ற அசாருதீன் (வயது31) என தெரியவந்தது.

  மேலும் இவர் கடந்த ஜூலை மாதம் 24-ந்தேதி ஜோலார்பேட்டை அருகே சின்ன கம்மியம்பட்டில் திருப்பத்தூர் கியூ பிராஞ் இன்ஸ்பெக்டர் புனிதாவிடம் நகை பறித்தவர் என்பது தெரியவந்தது. புனிதா மொபட்டில் சென்ற போது அவர் அணிந்திருந்த 7 பவுன் செயினை அசாருதீன் பறித்து சென்றுள்ளார்.

  மேலும் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்பவரது மனைவி சசிகலாவிடமும் 4 பவுன் செயினை பறித்துள்ளார்.

  இதனையடுத்து ஜோலார்பேட்டை போலீசார் அசாருதீன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களிடமிருந்து 11 பவுன் தங்க நகை பறிமுதல் செய்தனர். 5 மாதங்களுக்கு பிறகு கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர்.
  Next Story
  ×