என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.
மருத்துவ சமுதாய மாணவர்களுக்கு மருத்துவக்கல்லூரியில் தனி இடஒதுக்கீடு- சங்க கூட்டத்தில் தீர்மானம்
முப்படை தளபதி பிபின் ராவத் மறைவுக்கும், மறைந்த ராணுவ வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருப்பூர்:
தமிழ்நாடு சவரத்தொழிலாளர் சங்க திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் வி.ஜீவமதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் நலவாரியத்தில் சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
கூட்டத்தில் மருத்துவ சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவக்கல்லூரியில் தனி இடஒதுக்கீடு வழங்க அரசின் கவனத்தை ஈர்க்க போராட்டம் நடத்துவது, மாநகர சங்கத்தின் சார்பாக இந்த மாத கடைசியில் திருமண ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் முப்படை தளபதி பிபின் ராவத் மறைவுக்கும், மறைந்த ராணுவ வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. முடிவில் செந்தில்குமார் நன்றி கூறினார்.
Next Story