என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பல்லடம் அரசு மருத்துவமனை.
  X
  பல்லடம் அரசு மருத்துவமனை.

  பல்லடம் அரசு மருத்துவமனையில் சமையலறை உதவியாளராக பணிபுரியும் பிணவறை உதவியாளர்- நோயாளிகள் அதிருப்தி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காலியிடங்களை நிரப்ப வேண்டிய மருத்துவமனை நிர்வாகம் ஒரு பிரிவில் வேலை செய்யும் உதவியாளர்களை மற்றொரு பிரிவிலும் மாற்றி வேலை வாங்கி வருகின்றனர்.
  பல்லடம்:

  பல்லடம் அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும், சுமார் 800க்கும் மேற்பட்ட புறநோயாளிகளும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது.

  காலியிடங்களை நிரப்ப வேண்டிய மருத்துவமனை நிர்வாகம் ஒரு பிரிவில் வேலை செய்யும் உதவியாளர்களை மற்றொரு பிரிவிலும் மாற்றி வேலை வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் பிரேதப்பரிசோதனை கூட உதவியாளர் சமையலறைக்கும் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

  இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறுகையில், நீண்ட நாட்களாக சமையலர் பணி காலியாக உள்ளது. காலியிடத்தை நிரப்ப மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. சமையலறை உதவியாளராக வேலை பார்த்தவர் சமையல் செய்து வருகிறார். அவருக்கு உதவியாக பிரேத பரிசோதனை கூட உதவியாளரை சமையலறை உதவியாளராகவும் வேலை வாங்குகின்றனர்.

  இந்த அவல நிலையில் நோயாளிகளுக்கு எப்படி தரமான உணவு வழங்க முடியும். எனவே அரசு நடவடிக்கை எடுத்து பல்லடம் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
  Next Story
  ×