என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் மூடப்பட்டிருந்ததை படத்தில் காணலாம்.
  X
  திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் மூடப்பட்டிருந்ததை படத்தில் காணலாம்.

  2 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்- திருப்பூரில் ரூ.3000கோடி வர்த்தகம் முடக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 352 வங்கிகளில் பணியாற்றி வரும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள், வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
  திருப்பூர்:

  பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் சார்பில் நாடு முழுவதும் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 352 வங்கிகளில் பணியாற்றி வரும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள், வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். போராட்டம் காரணமாக நாள் ஒன்றுக்கு ரூ.1,500 கோடி என 2 நாட்களில் மொத்தம் ரூ.3,000 கோடி பணப்பரிவர்த்தனை பாதிக்கப்படும் என்று வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

  பின்னலாடை நகரமான திருப்பூர்  மட்டுமின்றி பல்லடம், காங்கயம், உடுமலை, அவிநாசி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வங்கிகள் மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக ஆடை உற்பத்தியாளர்கள் பண பரிவர்த்தனை செய்ய முடியாமல் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

  மேலும் அனைத்து வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வங்கிகள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஊழியர்கள் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.
  Next Story
  ×