என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது
சந்தேகப்படும்படி இருந்த 2 வாலிபர்களை விசாரணை செய்தபோது அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவது தெரியவந்தது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள தெற்குபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்தப்பகுதியில் சந்தேகப்படும்படி இருந்த 2 வாலிபர்களை விசாரணை செய்தபோது அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அவர்கள் பல்லடம் தெற்குபாளையம் பிரிவு முத்து நகர் பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் மகேஸ்வரன்(வயது 21) மற்றும் வெட்டுப்பட்டான் குட்டை பகுதியைச் சேர்ந்த தங்கராஜ்(40)என்பதும் இருவரும் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story