என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்.
  X
  கோப்புபடம்.

  பெண்கள் விடுதி காப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விண்ணப்பிக்க இளங்கலையில் பட்டம் மற்றும் பி.எட். கல்வியியல் சான்று பெற்றிருக்க வேண்டும்.
  திருப்பூர்:

  ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் இயங்கும் குண்டடம், மூலனூர்  பெண்கள் விடுதி கூடுதல் காப்பாளர் பணியிடங்களுக்கு வருகிற 23-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 

  இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  திருப்பூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின்கீழ் இயங்கும் குண்டடம், மூலனூர் பெண்கள் விடுதி கூடுதல் காப்பாளர் பணியிடங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

  இதில் விண்ணப்பிக்க இளங்கலையில் பட்டம் மற்றும் பி.எட். கல்வியியல் சான்று பெற்றிருக்க வேண்டும். அதேவேளையில், பணி அனுபவம் இருந்தால் அதற்கான சான்றிதழையும் இணைக்க வேண்டும். இப்பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். 

  ஆகவே மேற்கண்ட தகுதியுடைய நபர்கள் டிசம்பர் 23-ந்தேதிக்குள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைந்தப் பள்ளி கல்வி, மாவட்ட திட்ட அலுவலகம், அறை எண்.521, 5-வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் திருப்பூர் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  Next Story
  ×