
வருமானவரித்துறையின் புதிய இணையதள முகவரியில் வருமானவரி கணக்குகள் தாக்கல் செய்வதில் பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்தது. இதுகுறித்து இன்போசிஸ் நிறுவன அதிகாரிகள் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்தி கொடுத்து உள்ளனர். அதன்படி புதிய இணையதள முகவரியில் ஒரு நாளைக்கு 6 லட்சம் பேர் வருமானவரி கணக்குகளை தாக்கல் செய்து உள்ளனர். தற்போது கடந்த 15-ந்தேதி நிலவரப்படி 3.59 கோடி பேர் வருமானவரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருகிற 31-ந்தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதால் வருமானவரி கணக்கு தாக்கல்கள் அதிகரித்து வருகிறது.
வரி செலுத்துவோர் கடைசி நிமிடம் வரை காத்திருக்க வேண்டாம். தாமதமின்றி வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன.
மேற்கண்ட தகவல்களை வருமான வரி கமிஷனர் சுரபி அலுவாலியா தெரிவித்து உள்ளார்.