என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  போராட்டத்தில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.
  X
  போராட்டத்தில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
  திருப்பூர்:

  திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு காந்திநகர், சாஸ்திரி நகர், பாரதியார் வீதிகளில் உள்ள சாக்கடை கழிவுநீரை அவ்வப்போது அகற்ற வேண்டும். வீட்டு குழாய் மற்றும் பொது குடிநீர் குழாயில் 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

  குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை செப்பனிட்டு தார்சாலை அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மாநகராட்சிக்குட்பட்ட முதலாவது மண்டல அலுவலகத்தில் இன்று மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. 

  இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 
  Next Story
  ×