search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெங்காயம்
    X
    வெங்காயம்

    விலை பல மடங்கு உயர்வால் விதை வெங்காயத்தை இருப்பு வைக்கும் விவசாயி

    கிணற்றுப்பாசன சாகுபடியில் சின்னவெங்காயத்துக்கு மட்டுமே அதிக சாகுபடி செலவாகிறது.
    உடுமலை:

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் கிணற்றுப்பாசனத்துக்கு இரு சீசன்களில் பல ஆயிரம் ஏக்கரில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் விதைகளை வாங்கி நாற்றங்கால் விட்டு  நாற்றுகளாகவும், விதை வெங்காயத்தை நேரடியாக நடவு செய்தல் என  இரு முறைகளை விவசாயிகள் பின்பற்றுகின்றனர்.

    கிணற்றுப்பாசன சாகுபடியில் சின்னவெங்காயத்துக்கு மட்டுமே அதிக சாகுபடி செலவாகிறது. எனவே பல்வேறு மாற்று வழிகளை விவசாயிகள் பின்பற்ற தொடங்கியுள்ளனர். கடந்த சீசனில் விதை வெங்காயத்தின் விலை கிலோ ரூ.100-க்கும் அதிகமாக விற்றது.

    எனவே நடவுக்கான செலவை குறைக்கும் வகையில் கடந்த சீசனில் அறுவடை செய்த வெங்காயத்தை அவற்றின் தாள் நீக்காமல் பட்டறை அமைத்து விவசாயிகள் இருப்பு செய்துள்ளனர்.

    தற்போது சராசரியாக விதை வெங்காயத்தின் விலை கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனையாகிறது. நாற்றங்கால் அமைப்பதற்கான விதை கிலோ ரூ. 2 ஆயிரத்தில் இருந்து ரூ.3ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    சின்னவெங்காய சாகுபடிக்கான விதையை முன்பு திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் இருந்து கொள்முதல் செய்து வந்தோம். அப்பகுதியில்  விதைத்தேவைக்காக தனியாக விளைநிலங்களில் சின்னவெங்காயத்தை பராமரிக்கின்றனர்.

    தற்போது இப்பகுதியிலேயே சிலர்  இருப்பு வைத்து விதை வெங்காயம் விற்பனை செய்கின்றனர்.தொடர் மழையால் நடவுப்பணிகள் தாமதித்து வருகிறது. சீசன் சமயங்களில் சின்னவெங்காய விதை விலை அதிகரிப்பது தொடர்கதையாக உள்ளது.

    எனவே தோட்டக்கலைத்துறை வாயிலாக  மானிய விலையில் சாகுபடிக்கான விதை விற்பனை செய்தால் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள்  தெரிவித்தனர்.
    Next Story
    ×