search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒமைக்ரான்
    X
    ஒமைக்ரான்

    ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை- வெளிநாடுகளில் இருந்து திருப்பூர் வந்த 121 பேர் தீவிர கண்காணிப்பு

    வெளிநாடுகளில் இருந்து திருப்பூர் வந்து 8 நாட்கள் நிறைவடைந்த 30 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் கோவை, திருச்சி, சென்னை விமான நிலையம் மூலம் திருப்பூர் மாவட்டத்துக்கு வரும் வெளிநாடு பயணிகள் குறித்த விவரம் மாவட்ட சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    அதன்படி டிசம்பர் மாத தொடக்கம் முதல் தற்போது வரை 121 பேர் வெளிநாடுகளில் இருந்து திருப்பூர் மாவட்டம் வந்துள்ளனர். இவர்களில் 10 பேர் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.இதுகுறித்து திருப்பூர் மாவட்ட  சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறியதாவது:-

    வெளிநாடுகளில்  இருந்து திருப்பூர் வந்து 8 நாட்கள் நிறைவடைந்த  30 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் ‘நெகட்டிவ்’ வந்துள்ளது. 

    யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை. மீதமுள்ளவர்கள் அவரவர் வந்த நாட்கள், ஒரு வாரம் நிறைவை கணக்கிட்டு கொரோனா பரிசோதனை செய்யப்படும். மறுஅறிவிப்பு வரும் வரை அவர்கள் வீட்டு தனிமையிலேயே கண்காணிக்கப்படுவார்கள் என்றார்.
    Next Story
    ×