search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முட்டை
    X
    முட்டை

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு

    கொரோனாவை எதிர்க்கும் வகையில் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முட்டை சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைத்ததை தொடர்ந்து முட்டை விற்பனை அதிகரித்து வருகிறது.
    நாமக்கல்:

    கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட தொடக்கத்தில் முட்டை வர்த்தகம் அதிகளவில் சரிவை கண்டது. கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து முட்டை விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகு முட்டை விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது.

    கொரோனாவை எதிர்க்கும் வகையில் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முட்டை சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைத்ததை தொடர்ந்து முட்டை விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால் உற்பத்தியை பொறுத்து விலையும் அவ்வப்போது அதிகமாகி வருகிறது. தற்போது ஒமைக்ரான் குறித்த அச்சம் மக்களுக்கு எழுந்துள்ளதால் முட்டை விற்பனை மேலும் அதிகமாகி உள்ளது.

    நாமக்கல் மண்டலத்தில் இந்த மாத தொடக்கத்தில் முட்டை விலை ரூ.4.50 ஆக இருந்தது. பின்னர் இது படிப்படியாக உயர்ந்து கடந்த 15-ந்தேதி ரூ.4.90 ஆனது. கடந்த ஒரு வாரமாக விலை இதே நிலையில் நீடித்தது. இந்த நிலையில் இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். அதன்படி, முட்டை விலை ரூ.4.90 லிருந்து 10 காசுகள் உயர்ந்து ரூ.5 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

    பிற மண்டலங்களில் முட்டை விலை ஆமதாபாத்தில் ரூ.5.30, பெங்களூருவில் ரூ.5.05, சென்னையில் ரூ.5.15, சித்தூரில் ரூ.5.08, டெல்லியில் ரூ.5.45, மும்பையில் ரூ.5.40 ஆக உள்ளது.

    Next Story
    ×