என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விபத்து பலி
  X
  விபத்து பலி

  புதுச்சத்திரம் அருகே லாரி டிரைவர் விபத்தில் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுச்சத்திரம் அருகே லாரி டிரைவர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  நாமக்கல்:

  புதுச்சத்திரம் அருகே உள்ள சேவாகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது44). லாரி டிரைவர். இவர் நேற்று களங்காணிக்கு மளிகை பொருட்கள் வாங்க மொபட்டில் சென்றார். களங்காணி கால்நடை மருந்தகம் அருகே சென்றபோது நிலைதடுமாறி மொபட் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது.

  இதில் படுகாயம் அடைந்த முருகேசனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே முருகேசன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அவருடைய மனைவி ரேவதி கொடுத்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
  Next Story
  ×