என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வேலைவாய்ப்பு முகாம்
  X
  வேலைவாய்ப்பு முகாம்

  முதுகுளத்தூரில், 18-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் ஏற்பாடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேலை தேடுவோர் கல்வி சான்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.
  முதுகுளத்தூர்:

  முதுகுளத்தூரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சி துறையும் இணைந்து தனியார் வேலை வாய்ப்பு முகாம் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஏற்பாட்டில் வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) முதுகுளத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.

  தமிழக அரசின் வேலைவாய்ப்பு பயிற்சித் துறையின் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டுதல் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து இந்த தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது.

  8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி பயின்ற வேலை தேடுவோர் காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை கலந்துகொண்டு பயனடையலாம். இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

  தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்கப்படுகிறது. இந்த தனியார் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவோரின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

  வேலை தேடுவோர் கல்வி சான்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.

  முதுகுளத்தூர் அரசு கலைக்கல்லூரி செல்ல பஸ் வசதி செய்யப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு முகாமிற்கான ஏற்பாடுகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்து வருகிறார்.
  Next Story
  ×