என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைது
  X
  கைது

  கபிஸ்தலத்தில் லாட்டரி விற்பனை செய்த வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கபிஸ்தலத்தில் தடை செய்த ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்தது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
  கபிஸ்தலம்:

  கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் அனிதாகிரேசி, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் கபிஸ்தலம் காவல் சரக பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

  அப்போது பாலக்கரையில் சந்தேகப்படும்படி நின்ற ஒருவரை அழைத்து விசாரணை செய்ததில் அவர் கபிஸ்தலம் சீதாலட்சுமிபுரம் ஜீவா நகரில் வசிக்கும் உமாபதி (வயது 32), என்பதும் அவர் தடை செய்த ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர் என்பதும் தெரியவந்தது.

  அவரிடமிருந்து 4 நம்பர் எழுதிய 5 ஆன்லைன் லாட்டரி சீட்டுகளையும், ரூ.2,710 பணத்தையும் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
  Next Story
  ×