என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நடமாடும் தேநீர் கடையை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  X
  நடமாடும் தேநீர் கடையை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  சென்னை உள்பட 5 மாவட்டங்களில் 20 நடமாடும் தேநீர் கடைகள்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ்நாடு சிறு, குறு - நடுத்தர தொழில்துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பில் 20 நடமாடும் டீ விற்பனை கடைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தொடங்கி வைத்தார்.
  சென்னை:

  பழங்குடி மக்கள், சிறு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் நடமாடும் டீ விற்பனை கடைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இன்ட்கோசர்வ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்.

  தமிழ்நாடு சிறு, குறு - நடுத்தர தொழில்துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பில் 20 நடமாடும் டீ விற்பனை கடைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தொடங்கி வைத்தார்.

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இன்ட்கோசர்வ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுப்ரியா சாஹூ, தேயிலை விவசாயிகளின் நலன், இன்ட்கோசர்வ்-ன் வியாபாரத்தை விரிவாக்குதல், பழங்குடி மக்கள் - இளைஞர்களுக்கு வாய்ப்பளித்தல் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசின் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நடமாடும் டீ விற்பனை கடைகள் முதற்கட்டமாக சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

  நடமாடும் டீ கடைகளில் டீ, காபி - சிறு தானிய உணவுகள் குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கபே காபி டே, ஸ்டார் பக்ஸ் போல் ஒரு பிரபலமான பிராண்ட் நடமாடும் டீ கடைகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும் இதன் சேவை விரிவாக்கப்படும் என்று சுப்ரியா சாஹூ பேசினார்.

  இன்ட்கோசர்வ் நிறுவனத்தின் தரமான பொருட்களை சிறந்த முறையில் ஆன்லைனிலும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுப்ரியா சாஹூ பேசியது குறிப்பிடத்தக்கது.

  முன்னதாக நடமாடும் டீ கடை துவக்க நிகழ்வில் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் இறையன்பு, இன்ட்கோசர்வ் சி.இ.ஒ. சுப்ரியா சாஹூ, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


  Next Story
  ×