search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் அமைச்சர் தங்கமணி
    X
    முன்னாள் அமைச்சர் தங்கமணி

    முன்னாள் அமைச்சர் தங்கமணி கிரிப்டோ கரன்சியில் முதலீடு

    கிரிப்டோ கரன்சி மூலம் பணம் அளிப்பதற்கான கட்டணம் குறைவு, எளிதானது என்பதால் சர்வதேச அளவில் இதில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான வீடு உள்பட நண்பர்கள், உறவினர் வீடுகள் என மொத்தம் 69 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தங்கமணி, அவரது மனைவி, மகன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    2016-ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் தங்கமணி தன்னிடம் ரூ.1 கோடி அளவில் சொத்துக்கள் இருப்பதாக தேர்தல் ஆனையத்தில் தெரிவித்திருந்தார். 2020-ம் ஆண்டு ரூ.7 கோடி வரை அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    மேலும் அவர் முறைகேடாக சேர்த்த சொத்துக்களை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கிரிப்டோ கரன்சி என்பது அரசால் ஒழுங்குபடுத்தப்படாத டிஜிட்டல் பணமாகக் கருதப்படுகிறது. அது ரூபாய் அல்லது டாலர்களாக அல்லாமல் சரக்குகள் மற்றும் சேவைகள் விற்க இவை பயன்படுத்தப்படுகின்றன.

    பல தொழில் நிறுவனங்கள் சர்வதேச பரிவர்த்தனைகள் செய்வதற்கு கிரிப்டோ கரன்சிகளை பயன்படுத்துகின்றன. கிரிப்டோ கரன்சி மூலம் பணம் அளிப்பதற்கான கட்டணம் குறைவு, எளிதானது என்பதால் சர்வதேச அளவில் இதில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    Next Story
    ×