என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைது
  X
  கைது

  செல்போன் திருட்டு வழக்கில் போலீஸ் ஏட்டு மகன் உள்பட 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை அருகே செல்போன் திருட்டு வழக்கில் போலீஸ் ஏட்டு மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  சென்னை:

  திருவண்ணாமலை மாவட்டம், அன்மருதை கிராமத்தை அடுத்த நரியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 25). இவர் சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் கட்டிடம் கட்டும் வேலை செய்து வந்தார். அங்கேயே தங்கி இருந்தார். அவரது செல்போன் உள்பட 4 பேரின் செல்போன்கள் திருட்டு போய் விட்டது. இது தொடர்பாக, டி.பி.சத்திரம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் ரமேஷ் மேற்பார்வையில் டி.பி.சத்திரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். 

  அந்த பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீசார் இந்த வழக்கில் குற்றவாளிகள் இருவரை கைது செய்தனர். அவர்களில் ஒருவர் பெயர் முத்து (22). இன்னொருவர் 17 வயது சிறுவன். அந்த சிறுவனின் தந்தை போலீஸ் ஏட்டாக வேலை செய்தார். மற்றொரு புகார் அடிப்படையில் அவர் பணி இடைநீக்கத்தில் உள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×