என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  வங்கியில் மயங்கி விழுந்து வாலிபர் உயிரிழப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அருண்குமார் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார்.
  பல்லடம்:

  பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் வட்டாரம் கொடுவாய் பகுதியை சேர்ந்த கிட்டுசாமி மகன் அருண்குமார் ( வயது 33). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு பல்லடம் கனரா வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு உள்ளது.

  ஏ.டி.எம். கார்டு சம்பந்தமாக வங்கி அலுவலரை நேரில் பார்த்து பேச பல்லடம் கனரா வங்கி வந்துள்ளார்.வங்கிக்கு செல்ல மாடி படிக்கட்டில் ஏறிகொண்டிருந்தவர் திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

  அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
  Next Story
  ×