search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் செரீப் காலனி குறிஞ்சி நகரில் இன்று காலை புகைமருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்.
    X
    திருப்பூர் செரீப் காலனி குறிஞ்சி நகரில் இன்று காலை புகைமருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்.

    திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 9 குழந்தைகள் உள்பட 16 பேருக்கு டெங்கு காய்ச்சல்

    அனைவரும் திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனை டெங்கு வார்டில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 16 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.

    இதில் வீரபாண்டி, எம்.ஜி.ஆர்., நகர், செல்லம் நகர், சாமுண்டிபுரம், அவிநாசி, என்.நாடார்புரம், அனுப்பர்பாளையம், சிட்கோ, அங்கேரிபாளையம் ஆகிய பகுதிகளில் 10 வயதுக்கு உட்பட்ட 9  குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானது. அவர்கள் அனைவரும் திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனை டெங்கு வார்டில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். கொசு உற்பத்தி உருவாக காரணமாகும் பொருட்களை கண்டறிந்து அங்கிருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

    மேலும் ஒவ்வொரு வார்டுகள் தோறும் புகைமருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×