search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயக்குமார்
    X
    ஜெயக்குமார்

    ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவு இல்லமாக தொடர ஒத்துழைக்க வேண்டும் - ஜெயக்குமார் வேண்டுகோள்

    ஜெயலலிதாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடைய அவர் வாழ்ந்த வேதா இல்லம் நினைவு இல்லமாக தொடர ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தீபா, தீபக்கிற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    சென்னை:

    சென்னை மாங்காட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஜெயலலிதாவின் சரித்திர சகாப்தம் அடுத்த தலைமுறைக்கு சென்றடைய வேண்டும் என்ற வகையில்தான் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக அ.தி.மு.க. அரசு சட்டமாக்கியது. அதற்கு தீபா, தீபக் முழு ஒத்துழைப்பு கொடுப்பதன் மூலம்தான் ஜெயலலிதாவுக்கு செய்கின்ற சிறப்பாக அமையும்.

    அவர்கள் பெருந்தன்மையோடு முழுமையான ஒத்துழைப்பு தருவதுதான் சிறந்த தீர்வாக இருக்க முடியும்.

    தேச நலன், தேச பாதுகாப்பு என்பதுதான் அ.தி.மு.க.வின் கொள்கை. ஆனால் இந்த ஆட்சிக்கு எதிராக யார் வாயை திறந்தாலும் உடனடியாக குண்டர் சட்டத்தில் போடுவது, பொய் வழக்கு தொடுப்பது எப்படி சரியாக இருக்கும்.

    வேதா இல்லம்

    அரசியலமைப்பு அடிப்படையில் கவர்னர் செயல்படுகிறார். இதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் கவர்னரை சந்தித்துவிட்டு ‘நீட்’டுக்கு விதிவிலக்கு கேட்டோம் என்று தமிழக அரசு தெரிவித்தது. ஆனால் கவர்னர் தரப்பில் இருந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பாக சந்தித்தார் என்று தெரிவிக்கப்பட்டது. இதில் எவ்வளவு முரண்பாடு உள்ளது.

    எதிர்க்கட்சியாக இருக்கும்போது 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று பேசினார்கள். இப்போது விடுதலை செய்யவேண்டியது தானே. இப்போது ஏன் 7 பேர் விடுதலை பற்றி பேசவில்லை. நாங்கள் எடுத்த முடிவில் இருந்து நாங்கள் பின்வாங்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×