என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளி காயம்
மருதாச்சலத்திற்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் அய்யம்பாளையம் சிவசக்தி நகரில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் ஒப்பந்த தொழிலாளி மருதாச்சலம் (வயது 39) பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது மின்சாரம் தாக்கியதில் கீழே தூக்கி வீசப்பட்டு பலத்த தீக்காயம் அடைந்தார்.
இதையடுத்து அவரை பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருதாச்சலத்திற்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
Next Story