என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பல்லடம் அருகே முன்விரோதத்தில் விசைத்தறி தொழிலாளி அடித்துக்கொலை- வாலிபர் வெறிச்செயல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆத்திரமடைந்த சுந்தரமூர்த்தி அங்கு கிடந்த கட்டையை எடுத்து பால சுப்பிரமணியின் தலையில் கடுமையாக தாக்கினார்.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேடபாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிர மணி(வயது 47). விசைத்தறி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுந்தர மூர்த்தி (38) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்தநிலையில் நேற்று சேடபாளையம் பஸ் நிறுத்தத்தில் பாலசுப்பிரமணி நின்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த  சுந்தரமூர்த்திக்கும் பாலசுப்பிரமணிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த சுந்தரமூர்த்தி அங்கு கிடந்த கட்டையை எடுத்து பால சுப்பிரமணியின் தலையில் கடுமையாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணி மயங்கி விழுந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர்  மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைக்கப்பட்டார்.

    அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் இன்று காலை  பாலசுப்பிரமணி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து  சுந்தரமூர்த்தியை கைது செய்தனர். 
    Next Story
    ×