என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருப்பூர் மாவட்ட கோர்ட்டு.
  X
  திருப்பூர் மாவட்ட கோர்ட்டு.

  திருப்பூர் கோர்ட்டு வளாகத்தில் கழிப்பறை வசதி- மாநகராட்சிக்கு நீதிபதி கடிதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொது இடங்களில் கழிப்பறை வசதியின்றி பெண்களும், மாற்று திறனாளிகளும் சிரமப்படுகின்றனர்.
  திருப்பூர்:

  திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் மத்திய அரசு திட்டத்தில் கழிப்பறை வசதி ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகத்துக்கு நீதிபதி கடிதம் அனுப்பி உள்ளார். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட அமர்வு நீதிபதி சொர்ணம் நடராஜன் திருப்பூர் மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பியுள்ள  கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

  திருப்பூர் பார் அசோசியேசன் சார்பில் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கழிப்பறை அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொது இடங்களில் கழிப்பறை வசதியின்றி பெண்களும், மாற்று திறனாளிகளும் சிரமப்படுகின்றனர்.

  அதேபோல் கோர்ட்டுகளுக்கு வழக்கு தொடர்பாக வரும் மனுதாரர்களும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.பொதுமக்களுக்கான கழிப்பறை கோர்ட்டு வளாகத்தில் இல்லாத நிலை உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கோர்ட்டு வளாகத்தில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கழிப்பறை  வசதி ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×