என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
சங்கரன்கோவிலில் லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்: கட்டிட தொழிலாளி பலி
சங்கரன்கோவில் அருகே உள்ள பாட்டத்தூரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவரது மகன் அருண்குமார் (வயது21).
இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து விட்டு தற்காலிகமாக கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார்.
நேற்று இரவு தனது சகோதரரான ஆகாஷ் (16) என்பவரை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு சங்கரன்கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே கூட்டுறவு கடைகளுக்கு அரிசி கொண்டு செல்லும் லாரி வந்து கொண்டிருந்தது.
எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளும், லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அருண் குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். படுகாயம் அடைந்த ஆகாசை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த அருண்குமார் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான மைதீன் என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.