search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முல்லை பெரியாறு அணை
    X
    முல்லை பெரியாறு அணை

    பெரியாறு, வைகை அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

    நீர் வரத்து குறைந்து வருவதால் பெரியாறு, வைகை அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக அணையின் நீர் மட்டம் 142 அடியிலேயே நிலை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது மழை குறைந்து விட்டதால் அணைக்கு நீர் வரத்தும் குறைந்து வருகிறது.

    நேற்று 3420 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று 1798 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் அணையில் இருந்து நேற்று 1867 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 1200 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    கேரள பகுதிக்கு 598 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 7666 மி.கன அடியாக உள்ளது.

    இதே போல் வைகை அணையின் நீர் மட்டமும் முழு கொள்ளளவை எட்டி 70.14 அடியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று 3100 கன அடி வந்த நிலையில் இன்று காலை முதல் 2828 கன அடியாக குறைந்துள்ளது.

    இதனால் நேற்று 2964 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது 2654 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5864 மி.கன அடியாக உள்ளது.
    Next Story
    ×