search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தாராபுரம் அருகே கிராம சபை கூட்டத்துக்கு உறுப்பினர்கள் வராததால் பொதுமக்கள் அதிருப்தி

    பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி இருந்ததால் பள்ளியின் எதிரே உள்ள சாலையோரத்தில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மாபட்டி பகுதியில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக ஊராட்சி மன்றதலைவர் அறிவித்திருந்தார்.

    அதன்படி கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்கு உள்பட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்களும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அம்மாபட்டியில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்துக்கு வந்தனர். 

    அப்போது பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி இருந்ததால் பள்ளியின் எதிரே உள்ள சாலையோரத்தில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ் புலிகள் கட்சியின் மேற்கு மண்டல துணைச் செயலாளார் ஒண்டிவீரன் கலந்து கொண்டார். 

    இக்கூட்டத்துக்கு ஊராட்சியில் உள்ள 9 வார்டு உறுப்பினர்களில் 3 வார்டு உறுப்பினர்கள் மட்டுமே வந்திருந்தனர். இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

    மேலும் ஊராட்சி நிர்வாகத்தால் பல லட்ச ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் எதையும் நிறைவேற்றாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

    ஜனவரி 26ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை அலுவலர்கள், கவுண்டச்சிபுதூர் ஊராட்சியின் அனைத்து வார்டு உறுப்பினர்களையும் வரவழைக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    மாவட்ட ஆட்சியர் வரவில்லை என்றால் ஜனவரி 26ஆம் தேதி நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டம் நடைபெறாது எனவும் தெரிவித்தனர். இறுதியாக தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல் சிறப்பு கிராம சபைக் கூட்டம் முடிவடைந்தது.
    Next Story
    ×