search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அம்பத்தூர், கொரட்டூரில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

    முகப்பேர் மேற்கு, பாடிகுப்பம் ரெயில் நகர் பகுதியில் மழை நீர் தேங்கி பாதிக்கப்பட்ட சுரங்கப்பாதையை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    அம்பத்தூர்:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    கனமழை தொடங்கிய நாள் முதல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

    மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அம்பத்தூர், கொரட்டூர் பகுதிகளை பார்வையிட்டார்.

    முகப்பேர் மேற்கு, பாடிகுப்பம் ரெயில் நகர் பகுதியில் மழை நீர் தேங்கி பாதிக்கப்பட்ட சுரங்கப் பாதையை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மீண்டும் மழை வெள்ளம் தேங்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து கொரட்டூர், சிட்கோ ஆவின் பால் பண்ணை அருகில் கருக்கு மேம்பாலத்தில் இருந்து கொரட்டூர் ஏரியை பார்வையிட்டார்.

    பின்னர் மேனாம்பேடு, அம்பத்தூர் டி.டி.பி. காலனி உள்ளிட்ட பகுதிகளை
    மு.க.ஸ்டாலின்
    பார்வையிட்டு அதிகாரிகளிடம் மழை சேத விவரங்களை கேட்டறிந்து நிவாரண பணிகளை முடுக்கி விட்டார்.

    அப்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஜோசப் சாமுவேல் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


    Next Story
    ×