search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திப்பம்பட்டி ஏரியில் தண்ணீர் நிரம்பியதை அடுத்து ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகள்
    X
    திப்பம்பட்டி ஏரியில் தண்ணீர் நிரம்பியதை அடுத்து ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகள்

    மேட்டூர் உபரி நீர் திட்டத்தின் கீழ் முதன்முதலாக காளிப்பட்டி ஏரி நிரம்பியது

    காளிப்பட்டி ஏரியின் கரைப் பகுதியில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவும், ஏரியில் குளிப்பவர்கள் கூட்டமாகவும் காட்சியளிக்கிறது.
    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் உபரி நீர் திட்டம் மூலம் 100 ஏரிகளுக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி திப்பம்பட்டி பகுதியில் இருந்து நீரேற்று நிலையம் அமைத்து, மின்மோட்டார்கள் மூலம் தண்ணீரை பம்ப் செய்து ராட்சத குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது.

    முதலாவதாக மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த காளிப்பட்டி ஏரிக்கு தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது. பின்னர் அங்கிருந்து மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பி வைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் தண்ணீர் மூலம் காளிப்பட்டி ஏரியில் தண்ணீர் நிரம்பி கண்கொள்ளாக்காட்சி அளிக்கிறது.

    இதனை அறிந்த சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார், வேன் போன்ற வாகனங்களில் வந்து இந்த ஏரியின் அழகை ரசித்து செல்கிறார்கள். ஒரு சிலர் ஏரியில் இறங்கி ஆனந்த குளியல் போட்டு செல்கின்றனர்.

    குறிப்பாக காலை 11 மணிக்கு மேல் மதியம் 3 மணி வரை இந்த ஏரியின் கரைப் பகுதியில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவும், ஏரியில் குளிப்பவர்கள் கூட்டமாகவும் காட்சியளிக்கிறது. இதனை பார்ப்பதற்கு காளிப்பட்டி ஏரி திடீரென சுற்றுலா தளமாக மாறியது போல் இருந்தது.





    Next Story
    ×