search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்வழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
    X
    கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்வழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    எல்லப்பாளையம்புதூரில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்-அமைச்சர் தொடங்கி வைத்தனர்

    காங்கயம் அருகே படியூர் ஊராட்சியில் உள்ள அரசு துவக்கப் பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
    காங்கயம்

    காங்கயம் அருகே  எல்லப்பாளையம் புதூரில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்வழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

    கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் தலா 20 வீதம் மொத்தம் ரூ.7 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் நடத்தப்பட உள்ளது.

    திருப்பூர்மாவட்டத்தில்13 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 260 முகாம்கள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல்,குடற்புழு  நீக்கம் செய்தல், செயற்கை முறை கருவூட்டல்,நோய்களுக்கு எதிரான தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட கால்நடை தொடர்பான சிகிச்சைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.

    முன்னதாக காங்கயம் அருகே படியூர் ஊராட்சியில் உள்ள அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் வினீத், தாராபுரம் கோட்டாட்சியர் குமரேசன், கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநர் பொன் பாரிவேந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×