search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரமாதேவி.
    X
    ரமாதேவி.

    சட்டத்திற்கு புறம்பான குற்ற சம்பவங்கள் நடந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் - வெள்ளகோவில் இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தல்

    வெள்ளகோவில் காவல் நிலையத்தில் 1 போலீஸ் இன்ஸ்பெக்டர், 3 சப்-இன்ஸ்பெக்டர், 4 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் என மொத்தம் 34 பணியிடங்கள் உள்ளன.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் 1941 ம் ஆண்டு காவல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த காவல் நிலையத்துக்குட்பட்ட 17 தாய் கிராமம், 249 குக்கிராமங்கள் உள்ளன.  

    இந்த காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் தற்போது 200க்கும் மேற்பட்ட நூல் மில்கள் மற்றும் ஆயில் மில்கள், விசைத்தறி கூடங்கள், எண்ணெய் ஆலைகள் இயங்கி வருகின்றன, இப்பகுதியில் பிரசித்தி பெற்ற வீரக்குமாரசுவாமி கோவில், நாட்டராயசாமி கோவில், முத்தூர் செல்வகுமார் சாமி கோவில், குப்பண்ணசாமி கோவில்கள் உள்ளன.

    இந்த காவல் நிலையத்தில் 1 போலீஸ் இன்ஸ்பெக்டர், 3 சப்-இன்ஸ்பெக்டர், 4 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் என மொத்தம் 34 பணியிடங்கள் உள்ளன. வெள்ளகோவில் காவல் நிலையத்தில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக இருந்து வந்தது. 

    இந்த மாதம் 1-ந் தேதி கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ரமாதேவி, வெள்ளகோவில் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இவர் வெள்ளகோவில் காவல் நிலையத்திற்கு முதல் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவார் . 

    கடந்த 6 நாட்களில் இன்ஸ்பெக்டர் ரமாதேவி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு 3 சூதாட்ட  வழக்குகள், 5 அரசு அனுமதியின்றி மதுபானம் விற்ற வழக்குகள், 3 அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை வழக்குகள், 5 விஷத்தன்மை உள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த வழக்குகள், 5 இதர வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.

    வெள்ளகோவில் பகுதி பொதுமக்கள் ஒத்துழைப்புடன் குற்றமில்லாத வெள்ளகோவிலாக மாற்ற ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வெள்ளகோவில் பகுதியில் சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாடினாலோ, சட்டத்திற்கு புறம்பான சூதாட்டம், மதுபானம் விற்பனை, லாட்டரி சீட்டு விற்பனை, புகையிலை விற்பனை, விபச்சாரம் உள்ளிட்ட சட்டத்துக்கு புறம்பான குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடந்தால் உடனே காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்த வேண்டுமாறு கேட்டு கொண்டுள்ளார். 

    அதே போல் வாகன விபத்துகளை குறைத்து உயிர் சேதங்களை தவிர்க்க நகர் பகுதியில் சாலையில் செல்லும்போது சாலை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பெண்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
    Next Story
    ×